இந்த வலையதளத்தில் உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டது.இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல.பல பதிவர்கள் எழுதிய நல்ல பதிவுகளைத்தான் இங்குதொகுத்துள்ளேன்.

என்னுடைய மற்ற இணையதளங்கள்

Thursday, January 26, 2012

ரேபீஸ் எச்சரிக்கை: தடுப்பூசி போட்டால் மரணத்தை தவிர்க்கலாம்



மனிதர்களை தாக்கும் மிக முக்கிய வைரஸ் ரேபிஸ் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கின்றது. விலங்குகளாலும், செல்லப்பிராணிகளாலும் இந்த நோய் தாக்குகிறது. உலகில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை மனிதர்கள் ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்களை ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து. சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில் தடுக்கலாம்.

பூனை, குரங்கு, நரி, ஓநாய், வவ்வால் போன்றவை மூலமும் ரேபிஸ் பரவும். ரேபிஸ் உடலில் பரவி நரம்பு மண்டலத்தை தாக்கினால் அதன் பிறகு செய்வதற்கு ஒண்றுமில்லை. மரணம் நிச்சயம். வெறிநாயின் எச்சிலிலும் ரேபிஸ் கிருமிகள் உண்டு. எனவே ஏற்கனவே காயம் இருந்து அதை நாய் நக்கினாலும் ரேபிஸ் பரவும். உணவு கட்டுப்பாடு ஏதும் கிடையாது.

கடிபட்ட இடத்தை மூடவேண்டாம்

நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். இது ரொம்ப முக்கியம். கடித்த இடத்தில் ரேபிஸ் கிருமிகள் கோடிக்கணக்கில் இருக்கும். குறைந்தது 2 நிமிடங்கள் ஓடும் டேப் தண்ணீரில் கழுவவேண்டும். அதன் பின் ஆன்டிசெப்டிக் லோஷன் போட்டு கழுவலாம். கடி வாயை மூடக்கூடாது; தையல் போடக்கூடாது. உடனே முதல் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும்.

நோய் தடுப்பூசி அவசியம்

இது எந்த விலங்கு கடித்தாலும் டிடி ஊசி போடவேண்டியது அவசியம். இதனையடுத்து ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க ரேபிஸ் ஊசி போடவேண்டும். அதிகமான அளவில் உள்ள காயத்திற்கு இம்யுனொக்லொபின் ஊசி கட்டாயம் போட வேண்டும்.

நாயை தொடுதல், உணவு ஊட்டுதல், காயம் படாத தோலை நக்குதல். போன்றவற்றிக்கு ஊசி தேவையில்லை. அதேசமயம் சிராய்ப்பு காயம், கவ்வுதல், குறைவான அளவில் ரத்தக்கசிவு போன்றவை ஏற்பட்டால் காயத்திற்கு முதலுதவி செய்யவேண்டும் பின்னர் ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி அவசியம் போடவேண்டும். ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள், நரி, ஓநாய், வவ்வால் கடி போன்றவற்றிர்க்கு நோய் தடுப்பூசி அவசியம் போடவேண்டும். காயத்திற்கு முதலுதவி மற்றும் ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி மற்றும் இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து ஆசியவை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
--


Tuesday, January 3, 2012

ஃப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவா? - சாப்பிடாதீங்க!

உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.

நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

விஷமாகும் உணவு

இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்

உணவியல் வல்லுநர்கள். மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!

எளிதில் நோய் தாக்கும்

அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை.

அதேபோல் நாட்கணக்கில் சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்த உணவை பின்னர் அடிக்கடி எடுத்து சூடு செய்து சாப்பிடுவதை நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமம். எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

Thanks
Thatstamil.com